Breaking News

கோட்டமுனை பொதுசுகாதார பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்



 டெங்கு பெருக்கம் அதிகமாக அடையாளம் காணப்பட்ட கோட்டமுனை பொதுசுகாதார பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன .

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பு அதிகமாக உள்ள பகுதியாக  காணப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபைகுற்பட்ட  கோட்டமுனை பொதுசுகாதார பிரிவில் இந்த டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் 12.02.2017. ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.   
.
இந்த டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் இலங்கை பொதுசுகாதார பரிசோதகர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் ஒழுங்கமைப்பில் சுகாதார வைத்திய அதிகாரி கே .அச்சுதன் தலைமையில் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு புகையிரத நிலைய முன்றலில்  நடைபெற்றது  
   .

இந்நிகழ்வில் அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி .தவராஜா ,மற்றும்  மட்டக்களப்பு  பிராந்திய  பொது சுகாதார மேற்பார்வை   பரிசோதகர் .  கே . ஜெயரஞ்சன்  , உட்பட  கிராம சேவை உத்தியோகத்தர் ,பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ,  இராணுவ படைவீரர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் , மாநகர சபை ஊழியர்கள் ,பாடுமீன் லயன்ஸ் கழக அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

இந்நிகழ்வினை தொடர்ந்து சோதனை நடவடிக்கையில் பொதுசுகாதார பரிசோதகர்கள் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள்,  படைவீரர்கள் ,மாநகர சபை ஊழியர்கள் , பாடுமீன் லயன்ஸ் கழக அங்கத்தவர்கள் ஆகியோர் இணைந்து கோட்டமுனை பகுதியில் உள்ள வீடுகள் , உணவகங்கள் மற்றும் அதனை அண்டிய  பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  

இந்த நடவடிக்கையின் போது  252  வீடுகள் பார்வையிட்டதுடன் இதன்போது டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய சூழலை வைத்திருந்தவர்கள்   27 பேருக்கு  எச்சரிக்கை அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டதுடன்    20  பேருக்கு எதிராக  வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


இந்த சோதனை நடவடிக்கையில் மட்டக்களப்பு பொதுசுகாதார பிரிவு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள், படைவீரர்கள் ,மாநகர சபை ஊழியர்கள் , பாடுமீன் லயன்ஸ் கழக அங்கத்தவர்கள் ஆகியோர்   கலந்துகொண்டனர்.  (லியோன்)