Breaking News

ஜனாதிபதியின் பேண்தகு யுகம் நிகழ்ச்சி திட்டத்தின் கிழக்கு மாகாண மக்கள் சந்திப்புக்கள்

பேண்தகு யுகம் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் கிழக்கு மாகாண மக்கள் சந்திப்புக்கள்  (01.02.2017) புதன்கிழமை இடம்பெற்றது .

 இதன்கீழ் கிழக்கு மாகாண முலமைச்சரின் ஏற்பாட்டில் போதையற்ற கிழக்கு , தூய்மையான சுற்றாடல்  , மரம் நடும் பசுமைப் புரட்சி தொடர்பான செயல்திட்டத்தின்  ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது .


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு இந்த செயல் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் .

இந்த நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இரா .சம்பந்தன் , கிழக்குமாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ , சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன ,மாவட்ட அரசாங்க அதிபர் .பி எஸ் .எம் .சாள்ஸ் , பொலிஸ் மாஅதிபர் பூசித ஜெயசுந்தர , மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , கிழக்குமாகாண சபை உறுப்பினர்கள் ,மாவட்ட அரச அலுவலக ,திணைக்கள அதிகாரிகள் , பாடசாலை மாணவர்கள் , இளைஞர்கள் , மதத்தலைவர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று மூன்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு கிழக்கில் பசுமை புரட்சி எனும் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடுகை நிகழ்வு இடம்பெற்றது .

இந்நிகழ்வினை தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கான  புலமைப்பரிசில்கள் , வறுமை கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களில் தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கான காணி உறுதி பத்திரங்களும் , வீட்டுக்கான உறுதி பத்திரங்களும் , பசுமை புரட்சிக்கான மரக்கன்றுகளும் ஜனாதிபதியினால்  வழங்கப்பட்டது .


பேண்தகு யுகத்தின்  போதையற்ற நாடாக மாற்றும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலக ஏற்பாட்டில் போதையிலிருந்து விடுதலைபெற்ற சகவாழ்வுடன் கூடிய நாடு எனும் தொனிப்பொருளில் போதைப்பொருள் தொடர்பான  விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டதுடன் ஜனாதிபதிக்கு நினைவு பரிசில்களும் வழங்கப்பட்டது . (லியோன்)