Breaking News

நாங்கள் நல்ல நிலைமையில் இருந்தால் தான் தேவையை தேடி வருகின்ற மக்களுக்கு நல்ல சேவையை வழங்க முடியும் .

ஒவ்வொருவருடைய மண வளத்திற்காக, நாங்கள் நல்ல நிலைமையில் இருந்தால் தான் தேவையை தேடி வருகின்ற மக்களுக்கு நல்ல சேவையை வழங்க முடியும் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர்  தெரிவித்தார்.

விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய நிகழ்வு   மூன்றாவது ஆண்டாக நாடளாவிய ரீதியில் அனைத்து  அலுவலக மற்றும் திணைக்களங்களிலும் தேசிய உடற்பயிற்சி நிகழ்வாக (06)திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு அமைய மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் வி .தவராஜா தலைமையில் இன்று மட்டக்களப்பு மாநகர சபை வளாகத்தில் தேசிய தேகாரோக்கிய உடற்பயிற்சி நிகழ்வுகள் நடைபெற்றது இந்நிகழ்வில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை அரசு அரசாங்க உத்தியோகத்தர் மத்தியிலே தேகாரோக்கியத்தை பேணுகின்ற வகையில் உடற்பயிற்சி வாரத்தினை ஒழுங்கு செய்து நடாத்திக்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் நாங்கள் இன்று 2017ஆம் ஆண்டுக்குரிய  தேகாரோக்கியத்தை வாரத்தின ஆரம்பித்துள்ளோம்.

தேகாரோக்கியம் ஏன் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தேவை என்றால் காலை 08.30 முதல் மாலை 04.30  வரை அலுவலகத்தில் இருந்து வேலை செய்பவர்கள் மற்றைய நேரங்களில் தமது வீட்டு வேளைகளில் ஈடுபடுவதனால் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு உடற்பயிற்சி செய்ய முடியாத நிலை உள்ளது.

ஆனால் உடற்பயிற்சி என்பது மிக மிக முக்கியம் ஒவ்வொருவருடைய மண வளத்திற்காக, நாங்கள் நல்ல நிலைமையில் இருந்தால் தான் தேவையை தேடி வருகின்ற மக்களுக்கு நல்ல சேவையை வழங்க முடியும் . அவ்வாறு இல்லாமல் தேகாரோக்கியம் குறைந்தவர்களாக மனநிலையிலே ஆரோக்கியம் இல்லாதவர்களாக இருந்தால் எங்களை நாடி வருகின்ற பொதுமக்களிடம் தான் காட்டிக்கொள்வோம்.

ஆகவே தான் இந்த அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தேகரோக்கியம் என்பது தேக பயிற்சி மிக மிக முக்கியமானது. ஆரம்ப காலங்களிலே எங்களுடைய சமுதாயம் அல்லது எங்களுடைய வேலை வகைகள் எங்களை உடற்பயிற்சிக்கு உட்படுத்தி இருந்து. எமது இறை வணக்கம் கூட இந்து சமயத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற பயிற்சிகள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வது அட்டாங்கம் நமஸ்காரம் செய்வது எல்லாம் உடற்பயிற்சிதான் அது விஞ்ஞான ரீதியாக இந்து மதம் இருப்பதன் காரணமாக அது அங்கு புத்தப்பட்டுள்ளது.

அதேபோன்றுதான் இஸ்லாம் மதமும் ,கிறிஸ்தவ மதமும் அதைத்தான் சொல்கின்றது. வணக்க முறைகள் எல்லாமே தேக பயிற்சியுடன் சம்பந்தப்பட்டவை.

ஆனால் இன்று அதற்கு அந்தர்ப்பம் கிடைப்பதில்லை.  ஆனால் நாங்கள் விரும்பியோ விரும்பாபலோ எங்களை சூழ்ந்து குடும்பம் இருக்கின்றது, மக்கள் இருக்கின்றார்கள் ஆகவே அரசாங்க உத்தியோகத்தர்கள் தேகாரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

இன்று பலருக்கு பலவகையான நோய்கள் இருக்கின்றது. அதற்கு காரணம் எங்கள் வாழ்க்கை முறை  மாறிக்கொண்டமை உணவு முறை மாறிக்கொண்டமை இதன் காரணமாக நாங்கள் எல்லோருமே ஒவ்வொரு வகையான நோக்குற்பட்டவர்களாக தான் இருக்கின்றோம்.

இதை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் தேக பயிற்சி முக்கியம் என இதன் போது தெரிவித்தார்.


இந்த தேகாரோக்கிய நிகழ்வில் மாநகர சபை பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன், அலுவலக கணக்காளர்,உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்  அனைவரும் கலந்துகொண்டனர்.
(லியோன் )