Breaking News

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கும் பொலிசாருக்கும் இடையில் முறுகல்


மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களது கோரிக்கையினை வலியுறுத்தி (28) செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

கடந்த ஒரு வாரமாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள்   இந்த கவன ஈர்ப்பு பேரணியை முன்னெடுத்தனர்.

கடந்த ஒரு வாரமாக தாங்கள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு எதுவித பதிலையும் அரசாங்கம் வழங்காமல் இருப்பதை கண்டித்தும் இதன்போது கோசங்கள் எழுப்பப்பட்டன.

அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சருக்கு எதிராகவும் கவன ஈர்ப்பு போராட்டத்தின்போது கோசங்கள் எழுப்பப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்;டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கையினை கிழக்கு மாகாணசபையும் மத்திய அரசாங்கமும் எடுக்கவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சவப்பெட்டியை வைத்து ஆர்ப்பாட்டத்தினை நடாத்திய வேலையற்ற பட்டதாரிகள் அதனை சுமந்தவாறு காந்தி பூங்காவில் இருந்து பேரணி ஆரம்பித்து பிரதான பஸ் நிலையம் ஊடாக மைக்கல் கல்லூரி,சிசிலியா பெண்கள் பாடசாலை,மத்திய கல்லூரி ஊடாக மட்டக்கள்பு மாவட்ட செயலகம் வரையில் பேரணி சென்றதுடன் மாவட்ட அரசாங்க அதிபரை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்ட போது அவ்விடத்திற்கு அரசாங்க அதிபர் வருகை தராத காரணத்தினால் ஆத்திரம் அடைந்த பட்டதாரிகள் தாங்களுக்கு கிடைக்கபெற்ற பட்டத்தின் நகல்களை தீயிட்டு எரித்தனர்.
இதனை தடுப்பதற்கு முயற்சித்த  போது பொலிசாருக்கும் பட்டதாரிகளுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது, இதன் போது இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒன்றிணைந்த பட்டதாரிகளின் சங்க  இனைப்பாளர்  தென்னே ஞானானந்த தேரருக்கு கையில் ஏற்பட்ட காரணத்தினால்  மீண்டும்  அங்கு பதற்றநிலை ஏற்பட்டது .

இந்த பதற்றநிலை பொலிசார் கட்டுபடுத்தி  சுமுக நிலைக்கு வந்ததன் பின்  பட்டதாரிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து  வெளியேறிய பின் மாவட்ட செயலக வளாகத்திற்கு முன்னாள் ஒன்று கூடிய பட்டதாரிகள் மீண்டும் தாங்கள் அரசாங்க அதிபரை சந்திக்க வருவதாவும் தங்களது இந்த ஆர்பாட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும்  கூறி மீண்டும் ஆர்பாட்டம் மேற்கொண்டுள்ள காந்தி பூங்கா வளாகத்திற்கு வந்தடைந்தனர் .

இந்த பேரணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டதுடன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கமும் தமது ஆதரவினை தெரிவித்து அதன் உறுப்பினர்களும் இந்த பேரணியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. (லியோன்)