Breaking News

டெங்கு காய்ச்சலினால் 22,562 பேர் பாதிப்பு

கிண்ணியாவில் தீவிரமாக பரவும் டெங்கு காய்ச்சலினை கட்டுப்படுத்தும்  நோக்கில் ரூபா 18 மில்லியன் செலவில் அவசர சிகிச்சைப் பிரிவொன்றை அமைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பிரதியமைச்சர் பைசல் காசிம், நேற்று  நாடாளுமன்றில் தெரிவிதுள்ளார். 

இதுவரையுமான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியாக டெங்கு காய்ச்சலினால் இதுவரை 22,562 பேர் பாதிக்கப்பட்டள்ளதுடன், 39 பேர் பலியாகியுளதுடன்  திருகோணமலை மாவட்டத்தில் 1,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 14 பேர் பலியாகியுள்ளனர் யாழில், 1387 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர்,

நோயாளர்களை துரிதமாக அடையாளம் காணும் வகையில் ஸ்கேன் இயந்திரத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.