அதிகமில்லை 40 லட்சம்தான் கேட்கிறேன் - நடிகையின் அலும்பு
நடித்து ஒரு படம்கூட வெளியாகவில்லை. அதற்குள் சம்பளத்தை எக்கச்சக்கமாக உயர்த்தி கேட்கிறார். கேட்டால், அப்படியெல்லாம் இல்லையே, 40 லட்சம்தான் கேட்கிறேன் என்று அசட்டையாக பதில் வருகிறது கீர்த்தி சுரேஷிடம்.
மலையாளத்தில் சீண்டப்படாமல் இருக்கும் பல நடிகைகளை தமிழ் திரையுலகம் சீராட்டி தலையில் வைத்து கொண்டாடியிருக்கிறது. அவர்கள் சீச்சீ என்று இங்குள்ளவர்களை விரட்டினாலும் இவர்களுக்கு சுரணை வருவதில்லை. லட்சுமி மேனனுக்கு மலையாளத்தில் துக்கடா வேடம் தரவே ஆளில்லை. அவர் தமிழின் முன்னணி நடிகை. ஒரு கோடியை தொடும் சம்பளம் வாங்குகிறார். மலையாளத்தில் முன்னணி ஹீரோவுக்கு தரப்படும் சம்பளம்.
கீர்த்தி சுரேஷ் நடித்து ஒரு படம்கூட தமிழில் வெளியாகவில்லை. அதற்குள், வேறு நடிகைகளே இல்லாதது போல் நான்கு படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்தனர். கேரளாவில் சிங்கிள் டிஜிட்டில் சம்பளம் வாங்கியவர் தமிழில் அரை கோடி டிமாண்ட் செய்கிறார். இதற்கெல்லாம் நம்மவர்கள்தான் காரணம்.
தகுதிக்கு மீறி ஒருவரை தலையில் தூக்கி வைத்தால் அரை கோடி என்ன ஐந்து கோடியே கேட்பார்கள்.



