Breaking News

நயன்தாரா படப்பிடிப்பில் பரபரப்பு!

நீண்ட நாட்களாய் காத்திருந்து, தற்பொழுது நயன்தாரா எண்ட்ரியானதும் சூடு பிடித்திருக்கிறது திருநாள் பட ஷூட்டிங். ஈ படத்திற்குப் பிறகு நயன்தாரா ஜீவா இணைந்து நடித்துவரும் படம் திருநாள். படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் நடந்துவருகிறது. ஆரம்பத்தில் ஜீவா சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்கிகொண்டிருந்தார்கள். இப்படத்தின் படப்பிடிப்பில் ஜூன் முதல்வாரம் நயன்தாரா கலந்துகொள்வதாகச் சொல்லப்பட்டது. ஆனால் சொன்ன தேதியில் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் போடா போடி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் நயன்தாரா இப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு வர தாமதமானது. தற்பொழுது நயன்தாரா திருநாள் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவருகிறார்.  நயன்தாரா படப்பிடிப்பிற்கு வந்ததும் ரசிகர்கள் கூட்டமாக குவிய ஆரம்பித்தனர். இதனால் படப்பிடிப்பு சுற்றிய பகுதிகளில் பரபரப்பு நிலவின. இப்படத்தை எஸ்.பி.ராம்நாத் இயக்கிவருகிறார். நயன்தாரா கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறார். முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாக ஜீவா நடித்துவருகிறார். காமெடி, ஆக்‌ஷன், காதல் கலந்த கதையாக உருவாகிவருகிறது திருநாள்