Breaking News

வான்வெளியில் பறக்கும் தட்டு மொபைல் போனில் படம் பிடித்த மாணவன் !

இந்தியாவின் உத்தரபிரதேசம் கான்பூரில் வான் வெளியில் மர்ம பொருள் ஒன்று பறந்ததாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த மர்ம பொருளை மாணவன் ஒருவன் தனது மொபைல் போனில் ப்டம் பிடித்து உள்ளான்.

இயற்கை மீது ஆர்வம் உடைய அந்த மாணவன் இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுத்து வந்தான் கடந்த வியாழக்கிழமை மேக கூட்டங்களை படம் பிடித்து கொண்டு இருந்தான் அப்போது வானில் பறக்கும் தட்டு ஒன்று பறந்து உள்ளது அதை படம் பிடித்து உள்ளான் இது குறித்து தனது பெற்றோர்களிடமும் கூறி உள்ளான்.

இது குறித்து மாணவன் கூறியதாவது:-

எனக்கு  இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும். நான் எனது மொபைல் போனில் மேகங்களின் வெவ்வேறு வடிவங்களை பட்ம் பிடித்து கொண்டு இருந்தேன்.  அப்போது நான் எடுத்த எனது புகைபட்டங்களில் வட்டவடிவமாக தட்டு போல் உள்ள ஒரு பொருளை படம் பிடித்து இருப்பதையும் பார்த்தேன். அதை பெரிதாக்கி பார்த்த போது அது மர்ம பறக்கும் தட்டாக தெரிந்தது. என்று கூறினார்.

இது குறித்து மாணவனின் தந்தை சந்தோஷ் குப்தா கூறியதாவது:-

நான் எனது மகன் எடுத்த புகைபடங்களை பார்த்தேன் அது உண்மையில் பறக்கும் தட்டுதான்.நடுவில் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டு இருந்தது சுற்றிலும் வெள்ளை நிறத்தில் இருந்ததை பார்த்தேன். நடுவில் இருந்து புகைபோன்ற ஒரு பொருள் செல்வது போல் தோன்றியது என்று கூறினார். மேலும் இந்த புகைபடங்கள் உண்மையானது இதை எந்த சோதனை கூடங்களிலும் பரிசோதித்து கொள்ளுங்கள் என் கூறி உள்ளார்.