டைனோசர் முகம் கொண்ட கோழி உருவாக்கப்பட்டது - ஆராய்ச்சியாளர்கள் சாதனை!!
பல கோடி வருடங்களுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த இனம் தான் டைனோசர். உருவத்தில் மிகவும் பிரம்மாண்டமாகவும், ஊர்வன, பறவை, நீர் வகை என பல வகை டைனோசர்கள் உயிர் வாழ்ந்ததாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது. "ஜுராஸிக் வேர்ல்ட்" டினோசர்கள் பற்றிய பிரமிக்க வைக்கும் உண்மை தகவல்கள்!!! இதன் பிறகு தான், டைனோசர், ஜுராசிக் பார்க், ஜுராசிக் வேர்ல்ட் என பல திரைப்படங்கள் வெளியாக தொடங்கின. சமீபத்தில் வெளியான புதிய ஜுராசிக் வோல்ர்ட் ஹாலிவுட் திரைப்படம் வசூலில் சக்கைப்போடுப் போட்டுக் கொண்டிருக்கிறது. வெளியான இரு வாரங்களிலேயே பில்லியன் டாலர்கள் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. எமது புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ள வியக்க வைக்கும் அறிவியல் பூர்வமான கண்டுப்பிடிப்புகள்!!! இந்த நேரத்தில் தான், ஆராய்ச்சியாளர்கள் டைனோசர் முகம் கொண்ட கோழியை உருவாக்கியுள்ளனர். ஒருவேளை, இது டைனோசர்களை உருவாக்கும் முயற்சியின் முதல் படியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது...
கரு உருவாக்கப்பட்டது
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், விண்கல் தாக்குதலில் டைனோசர் இனம் அழிந்ததாக கூறப்பட்டாலும். சில பறவை வகை டைனோசர்கள் உயிர் தப்பியது. அவை தான் இன்றைய பறவை இனங்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இப்போது, அதில் இருந்து ஆரம்பிக்கவே, ஓர் கோழியை டைனோசர் முகம் கொண்டு உருவாக்கியுள்ளனர். இதன் கருவை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
19ஆம் நூற்றாண்டு ஆராய்ச்சி
கடந்த 19ஆம் நூற்றாண்டிலிருந்து, டைனோசர்கள் பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. டைனோசர்களின் படிமங்களை கண்டெடுத்து அதிலிருந்து ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டன. முதன் முதலில் பறவை வகையை சேர்ந்த "Archaeopteryx" என்ற படிமத்தை வைத்துதான் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
முந்தைய பழைய படிமங்களோடு இன்றைய பறவைகளின் படிமங்கள் ஒப்பிட்டு பார்க்கையில், அவைக்கு அலகு (முனை மூக்கு) இல்லை, ஆனால், முகவாய் நீண்டு இருந்திருக்கிறது என்று கண்டறியப்பட்டது.
மூலக்கூறு ஆராய்ச்சி
ஆனால், மூலக்கூறுகளை வைத்து பார்க்கையில் பறவைகளின் முன்னோர்களாக "Archaeopteryx" வகை டைனோசர்கள் இருந்திருக்கலாம் என்று தெரியவந்தது.
வெலாசிராப்டர் (Velociraptor)
எனவே, மூலக்கூறுகளை வைத்துக்கொண்டு, கோழியின் கருவோடு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு. வெலாசிராப்டர் என்ற வகையை சேர்ந்த நீண்ட மூக்குடைய டைனோசர் போன்ற முகம் கொண்ட கோழியை ஆராய்ச்சியாளர்கள் உருவாகியுள்ளனர்.
முடிவகள் வெளியீடு
இந்த முடிவுகளை "The Journal of Evolution" என்ற பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
யாலே மற்றும் ஹார்வர்ட் பல்கலைகழகங்கள் பார்ட்-அஞ்சன் புல்லர் (யாலே பல்கலைகழகம்) மற்றும் அர்ஹாட் அப்ஜாநோவ் (ஹார்வர்ட் பல்கலைகழகம்) என்ற இருவர் தான் இந்த "டைனோ-சிக்கன்" உருவாக்கத்திற்கு முதன்மை விஞ்ஞானிகளாக இருந்துள்ளனர்.
உலகில் மொத்தம் 10,000'திற்கும் மேற்ப்பட்ட பறவை வகைகள் இருக்கின்றன. அவைகள் யாவும் மூக்கு பகுதியில் பல வித்தியாசங்கள் கொண்டவை. அவற்றை எல்லாம் பல தூரம் பயணம் செய்து, மாற்றங்கள் ஏற்பட்டதை ஆராய்ச்சி செய்து, இவர்கள் இதைக் கண்டறிந்துள்ளனர்.
டைனோசர் மூக்கு உருவாக்கப்பட்டது
பல ஆராய்ச்சிகள் மற்றும் பல மரபணுக்களை ஆராய்ந்ததன் மூலமாக, கோழியின் முகத்தை டைனோசர் முகத்தை போல உருவாக்கி இவர்கள் சாதனை செய்துள்ளனர்.
உயிர் வாழும் வாய்ப்புகள்
இவர்கள் உருவாக்கியுள்ள புதிய டைனோ-சிக்கனின் அடுத்த நிலைபற்றிய எந்த திட்டமும் இல்லை என்றும். ஆனால், இது நல்ல முறையில் உயிர் வாழும் என்றும் கூறியிருக்கிறார்கள் பார்ட்-அஞ்சன் புல்லர் மற்றும் அர்ஹாட் அப்ஜாநோவ்.



