உங்களது சகோதர சகோதரிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் தொழிலுக்காக சவூதி சென்று துன்பப்படும் நிலை முடிவுறுத்தப்படும்...
உங்களது சகோதர சகோதரிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் தொழிலுக்காக சவூதி சென்று துன்பப்படும் நிலை முடிவுறுத்தப்படும் - கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் தயா கமகே
உங்களது சகோதர சகோதரிகள் மற்றும் இளைஞர் யவதிகள் தொழிலுக்காக சவூதி சென்று துன்பப்படும் நிலை முடிவுறுத்தப்படும் என கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயா கமகே தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (26) காத்தான்குடி பாலமுனை சந்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் அல்ஹாஜ் ஏச்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்ற பாலமுனை – கர்பலா வீதி புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக வைத்ததன் பின்னர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட கருத்தினைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், கடந்த காலத்தில் திருடியவர்கள், தாம் செல்லும் போது பதிவுப் புத்தகங்களையும் தங்களுனேயே எடுத்துச் சென்று விட்டார்கள். தற்போது திருடர்களைப் பிடிப்பது இலேசான காரியமல்ல. இவ்வாறு திருடியதனால்தான் எதிர்காலத்தில் பிறக்கப்போகின்ற குழந்தைகளும் நான்கு இலட்சத்தி இருபத்தையாயிரம் ரூபா கடனாளிகளாக இருப்பார்கள். இதற்காகத்தான் ஆட்சியினைக் கோரினோம். நீங்கள் வாக்குகளை அளித்தீர்கள் நாம் ஆட்சியமைத்தோம். அதில் மைத்திரிபால சிரிசேன அவர்களை ஜனாதிபதியாக்கினோம் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தோம்.
நாம் நூறு நாட்களுக்காக அரசாங்கத்தினை அமைத்தோம். நாம் பாராளுமன்றத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும். நாம் எதிர்பார்ப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சக்திமிக்க பாராளுமன்றத்தினயாகும். இப்போதிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திக்காக அல்லது மக்கள் நலனுக்காகவோ அல்லது மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவோ கைகளை உயர்த்தி ஆதரவளிக்க மாட்டார்கள்.
பிரதமர் ரணில் விகரமசிங்க அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுடன் இணைந்து பிறக்கப்போகும் பிள்ளைகளுக்காகவும் சிறந்த எதிர்காலத்தைத் திட்டமிட்டுள்ளார்.
எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் 10 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம்.
புனரமைப்புச் செய்யப்படும் இந்தப் பாதை 15 ஆண்டுகளுக்கு முன்னர் புனரமைப்புச் செய்திருக்கப்பட வேண்டும், எனினும் துரதிஷ்டவசமாக நாம் எதிர்க் கட்சியாகிவிட்டதால் அது முடியமல் போய்விட்டது.
ஏதிர்காலத்தில் நாட்டின் அபிவிருத்தியினை அடிப்படையாகக் கொண்டு உங்களது சகோதர சகோதரிள் மற்றும் இளைஞர் யவதிகள் தொழிலுக்காக சவூதி சென்று துன்பப்படும் யுகம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு கைத்தொழில் பேட்டைகளை அமைத்து வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் யுகத்தினை அடுத்த வருடம் உருவாக்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
பெருந்தெருக்கள் அமைச்சர் கபீர் ஹாஷிமின் நிதி ஒதுக்கீட்டில் 2050 மீற்றர் நீளமும் 4.5 மீற்றர் அகலமும் கொண்ட பாலமுனை – கர்பலா வீதி இரண்டு கட்டங்களாக வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் நேரடியாக புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. இந்தப் புனரமைப்புப் பணிகளுக்காக முதல் கட்டமாக 3.9 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாலமுனை – கர்பலா வீதி புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியியலாளர் அப்துல் றகுமான் உள்ளிட்ட முன்னணியின் முக்கியஸ்தர்கள், வீதி அபிவிருத்தித் திணைக்கத்தின் அதிகாரிகள்; ஊர்ப் பிரமுகர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
நமது நிருபர்



