லிங்குசாமியின் சண்டக்கோழி 2 - விஷாலுடன் இணையும் தமன்னா?
பாண்டிய நாடு படத்துக்குப் பிறகு விஷாலும் முன்னணி நடிகர்களின் இடத்தைப் பிடித்திருக்கிறார். அவர் நடித்துவரும் பாயும் புலியில் காஜல் அகர்வால் ஹீரோயின். அடுத்து அவர் ஜோடி சேரப்போவது தமன்னாவுடன் என்கின்றன செய்திகள்.
லிங்குசாமியின் சண்டக்கோழி 2 விரைவில் தொடங்குகிறது. சண்டக்கோழியில் நடித்த விஷால் ஹீரோ. அவரது தந்தையாக நடித்த ராஜ்கிரண் படத்தில் இருக்கிறார். நாயகி மீரா ஜாஸ்மினும் உண்டு. காமெடிக்கு புதிதாக சூரியை சேர்த்திருக்கிறார்கள். இசை யுவனுக்குப் பதில், டி.இமான்.
படத்தில் இன்னொரு நாயகியாக தமன்னாவை ஒப்பந்தம் செய்யவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. லிங்குசாமியின் வெற்றிப் படம் பையாவில் தமன்னா நடித்திருந்தார். தற்போது ஆர்யாவுடன், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் நடித்து வருகிறார்.



