சச்சினுக்குப் பிறகு இளம் வயதில் நம்பர் - 1 இடத்தைப் பிடித்த ஸ்டீவன் ஸ்மித்
சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு ஐசிசி தரவரிசைப் பட்டியலில், இளம் வயதில் நம்பர் - 1 இடத்தை ஸ்டீவன் ஸ்மித் பிடித்து சாதனை படைத்துள்ளார்.சமீபத்தில், ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. அதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரானப் போட்டியில் 199 ரன்கள் எடுத்தார். இதனால், சங்கக்கரா மற்றும் டி வில்லியர்ஸை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார்.



