Breaking News

இயேசு பிரான் உடல் மீது போர்த்தப்பட்ட துணியை தரிசித்தார் போப்

இயேசு பிரான் உடல் மீது போர்த்தப்பட்ட துணியை தரிசித்தார் போப்

இயேசு பிரான் மரணமடைந்த பின்னர் அவரது உடல் மீது போர்த்தப்பட்டதாகக் கருதப்படும் துணியினை பார்வையிட்டு அதை வணங்கி போப் பிரான்சிஸ் மரியாதை செலுத்தியுள்ளார். இதற்காக வடக்கு இத்தாலியிலுள்ள ட்யூரின் தேவாலயத்துக்கு ஞாயிறன்று விஜயம் செய்தார்.

அந்தத் துணி இயேசு உயிரிழந்த பிறகு அவரது உடல் மீது போர்த்தப்பட்டதாக பல கிறிஸ்தவர்களால் கருத்தப்படும் நிலையில், அதை நேரில் காண்பதற்காகவே போப் அங்கு பயணித்துள்ளார்.

ட்யூரின் நகரிலுள்ள தேவாலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அந்த துணியை தரிசித்ததன் பின்னர், போப் பிரான்சிஸ் திருப்பலிப் பூசைகளுக்காக, நகரின் மத்திய சதுக்கத்திற்கு சென்றார்.

வடக்கு இத்தாலிக்கு மதக் கடமைகளுக்கான தனது முதல் பயணத்தை மேற்கொண்ட போப் பிரான்சிஸ் அங்கு சிறைக் கைதிகள், குடியேறிகள், மற்றும் நோயாளிகளையும் சந்திக்கின்றார்

இயேசுக் கிறிஸ்துவின் உருவம் பதிந்துள்ளதாக கூறப்படும் இந்தத் துணியை, பல இலட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர். 2010 ற்குப் பின்னர், இந்த ஆண்டே முதல் முறையாக, இது பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.