கண்நோய் எச்சரிக்கை !
தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் கண்நோய் பரவி வருவதால், பொதுமக்களை அவதானத்துடன் இருக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கண்களில் வேதனை, பீளை (பூளை) அல்லது கண்ணீர் நிறைதல், கண்கள் சிவந்திருத்தல் மற்றும் காலையில் எழும்பும்போது கண்களில் பீளை நிறைந்திருத்தல் போன்றன, இந்த கண் நோய்க்கான ஆரம் அறிகுறிகளாகும். கண்நோய் காரணமாக நாளொன்றுக்கு, அதிகளவான நோயாளிகள் வைத்தியசாலைகளை நோக்கி வருகின்றனர். இக்கண்நோய் வைரஸ் அல்லது பற்றீரியா தாக்கத்தினால் ஏற்படுகின்றது எனவும் இது 3 அல்லது 4 நாட்களுக்கு நீடிக்கும் என வைத்திய பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.



