Breaking News

செங்கலடியில் ரயிலிலுடன் மோதி யுவதி பலி

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தாறுமூலையில் ரயிலில் மோதி யுவதி பலியாகியுள்ளதுடன் மற்றுமொரு யுவதி படுகாயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில்   களுவன்கேணி காளிகோயில் வீதியைச் சேர்ந்த 26  வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார். மேற்படி இருவரும் களுவன்கேணியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்தாறுமூலை நோக்கி வந்து கொண்டிருந்த போதே கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் மோதுண்டுள்ளனர்.