குப்பைப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் - கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் கோரிக்கை
நமது நிருபர்
எமது
பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கின்ற குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு
காண்பதற்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்வர வேண்டுமென கிழக்கு மாகாண சபை
உறுப்பினர் ஷிப்லி பாறூக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது
அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து
கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி கோரிக்கையினை முன்வைத்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்
தற்போது
காத்தான்குடியில் எதிர்பாராத பிரச்சினையொன்று உருவாகியுள்ளது. இது
நீண்டகாலப் பிரச்சினையாகும். கடந்த இரண்டுஇ மூன்று வருடங்களுக்கு முன்பாக
குப்பைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறு கோரி பொதுமக்கள் வீதி
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர்
சிவனேசத்துரை சந்திரகாந்தன் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு
காண்பதற்காக காணியொன்றைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்திருந்தார்.
இப்பிரச்சினைக்கான
மாற்றுத் திட்டமாக காத்தான்குடி பிரதேசத்திற்குட்பட்ட காணிகளில் இக்
குப்பைகளைக் கொட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து ஆற்றங்கரையில் இக் குப்பைகள் கொட்டப்பட்டன. எனினும்
ஆற்றங்கரைப் பகுதியில் ஏற்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளை அடிப்படையாகக்
கொண்டு குப்பைகள் கொட்டப்படுவதற்கு வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த
மாதம் ஆற்றங்கரையோம் குப்பைகளைக் கொட்டக் கூடாதென மாவட்ட நீதிமன்றம்
தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் காரணமாக குப்பைகளை அகற்றுவதில் பாரிய சிக்கல்
நிலை தோன்றியுள்ளது. இந்தப் பிரச்சினை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்
கூட்டத்தில் முன்வைக்கப்பட்டபோதுஇ ருNழுPளு செயற்றிட்டத்தில்
காத்தான்குடிப் பிரதேசமும் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும்
செப்டம்பர் மாதமளவில் இதற்கு தீர்வுகாணப்படும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட
அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் உறுதியளித்துள்ளார்.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் காத்தன்குடி பிரதேசம் 4.7 கிலோமீற்றர் பரப்பளவைக்
கொண்டதாகும். இந்தப் பிரதேசத்தினுள் 60இ000 பேர் வாழ்கின்றார்கள். தினமும்
30 தொடக்கம் 35 தொன் குப்பைகள் வெளியேற்றப்படுகின்றன. அதனை பராமரிப்பதற்கு
திட்டமோஇ இடமோ இங்கு இல்லை.
இந்தப் பிரச்சினைக்கு
தீர்வு காணப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில்
ஈடுபட மக்கள் தயாராக இருக்கிறார்கள். இவ்வாறான சாலைமறியல் போராட்டத்தில்
ஈடுபடும் பட்சத்தில் ஆட்சி மாற்றத்தின் பின்னரான சுமூக நிலை
பாதிக்கப்படுவதோடு மக்கள் மத்தியில் அதிருப்தியும் ஏற்படும்.
ஜனாதிபதியவர்கள்
உலக சுற்றாடல் தினத்தில் கூறிய விடயம்தான் எந்த ஒரு நபரும் சுற்றாடலுக்கு
தீங்கு விளைவிக்க முடியாது அவ்வாறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
என்பதாகும். ஜனாதிபதியவர்களின் கருத்துப்படி இந்தப் பிரச்சினையும்
சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கும் விடயமாகும். இதற்கு தீர்வு காணபதற்காகவே
நாம் முற்படுகின்றோம்.
இந்தக் குப்பைகளை
தொடர்ச்சியாக வீடுகளில் வைத்திருக்க முடியாது. இதன் மூலமாக நோய்த்
தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு நோய்த் தொற்று ஏற்படுமானால்
இந்தப் பிரதேசம் மட்டுமல்லாதுஇ இந்தப் பிராந்தியமும் பாதிக்கப்படும்.
எனவேஇ
இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பொறுப்பு
வாய்ந்தவர்கள் அனைவரும் முன்வர வேண்டும். குறைந்த பட்சம் உக்கக் கூடிய
குப்பைகளையாவது உடனடியாக அகற்ற வேண்டும்.
நாம் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
நகரசபையின்
முன்னாள் தவிசாளர் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் தன்னால்
இயலுமானதையெல்லாம் நிறைவேற்றியுள்ளார். அவரை நான் குறை கூற முடியாது.
தற்போது குப்பைகளுக்கு பைகளை வழங்கிக்கொண்டிருப்போர் நான்கு வருடங்களுக்கு
முன்னர் அதனைச் செய்திருந்தால் இப்போது இப்படியான பிரச்சினையொன்று
எழுந்திருக்காது
முன்னாள் நகரசபைத் தவிசாளர்
மற்றும் எதிக்கட்சியினருடன் இந்த விடயத்தில் இணைந்து செயற்படுவீர்களா? என
ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கிழக்கு மாகாண சபை
உறுப்பினர் ஷிப்லி பாறூக் கடந்த காலத்தில் பதவி வகித்த நகரசபை
எதிர்க்கட்சியினர் எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை. தற்போது
அதிகாரமற்றிருக்கும் முன்னாள் உறுப்பினர்களுடன் பேசுவதால் எந்தப் பயனும்
ஏற்படாது. எனது அதிகாத்திற்குட்பட்ட வகையில் இப் பிரச்சினைக்குத் தீர்வுகாண
மும்முரமாக முயன்று வருகின்றேன்.
வில்பத்துப் பிரச்சினை
வில்பத்துப்
பிரச்சினையென்பது உண்மையினை மூடி மறைக்க எடுக்கப்படும் முயற்சியாகும்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீள அவர்களது இடங்களில்
குடியேற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. இதனை தமிழ்
மக்கள் மாத்திரமல்லாது பெரும்பான்மை மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த
வியத்தில் அரசியல் பின்னணி காணப்படுகின்றது. பூர்வீக அல்லது அரச காணியில்
மேற்கொள்ளப்படும் குடியேற்றம் இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக
மேற்கொள்ளப்படல் வேண்டும்
போராட்டங்கள் இரு
வகைப்படும் - ஒன்று பத்திரிகையினை வைத்துக்கொண்டு போராடுவது மற்றயது
பத்திரிகை இல்லாது போராடுவது. நாம் சில விடங்களை வெளிப்படுத்தாது எமது
செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். எமது விடயங்கள் பத்திரிகைகளில்
வரவில்லை என்பதற்காக நாம் எதையும் செய்யவில்லை எனக் கருதக் கூடாது.
கடந்த
அரசாங்கத்தில் மஹிந்தவின் மௌனம் என்பது வேறு விடயம். முஸ்லிம்களுக்கு
எதிரான அனைத்து தாக்குதலுக்கும் சூத்திரதாரியாக இருந்து விட்டு
சம்பந்தப்பட்டவர்களை தெளிவான ஆதாரங்கள் இருந்தபோதிலும் கைது செய்யவில்லை.
எனவும் அவர் தெரிவித்தார்



