வில்பத்து சுற்றுச்சூழல் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
நமது நிருபர்
வில்பத்து சரணாலயத்திற்கு அண்மித்த பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பாக சுற்றுச்சூழல் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் கைளிக்கப்பட்டது.
அத்துரலியே ரத்ன தேரரின் தலைமையிலான தேரர்கள் குழுவினரும் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தலைமையிலான சூழலியலாளர்களும், ஜாதிக சங்க சம்மேளன உறுப்பினர்களும் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதன்போது பிரசன்னமாகி இருந்தனர்.



