Breaking News

ஈராக்கின் முன்னாள் பிரதிப் பிரதமர் தாரிக் அஸீஸ் சிறையில் மரணம்


ஈராக்கின் முன்னாள் பிரதிப் பிரதமரும் வெளிநாட்டு அமைச்சருமான தாரிக் அஸீஸ் சிறையில் தனது 79ஆவது வயதில் காலமானார் 

சதாம் ஹூஸைனின் ஆட்சிக்காலத்தில் பிரதிப் பிரதமராகவும் வெளிநாட்டு அமைச்சராகவும் பதவி வகித்த தாரிக் அஸீஸ் 2003ஆம் ஆண்டு அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்தது தொடக்கம் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.
    
வியாழக்கிழமையன்று மரடைப்பினால் பாதிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை மாலை மரணித்ததாக ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

'எனது தந்தை மரணமடைந்தது தொடர்பில் ஈராக்கிய அதிகாரிகள் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை, உள்ளூர் ஊடகங்கள் மூலமாகவே நான் இந்தத் தகவலை அறிந்து கொண்டேன்' என தாரிக் அஸீஸின் மகன் ஸியாட் தெரிவித்தார் 

1936 இல் பிறந்த இவர் சதாம் ஹூஸைன் ஜனாதிபதியாக இருந்தபோது உயர்நிலை கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த உயர் அதிகாரியாக விளங்கியதோடு அப்போதைய பாத் கட்சியின் முக்கிய உறு;பினராகவும் இருந்தார். 

அமெரிக்கா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் ஈராக்கை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டு பதவியிலிருந்து அகற்றப்பட்ட அப்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு உடந்தையாய் இருந்தமைக்காக 2010 ஆண்டு ஈராக்கிய உயர்மட்ட தீர்ப்பாயத்தினால் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.