Breaking News

’தோனி இனிமேல் ’மிஸ்டர் கூல்’ கிடையாது...!

மகேந்திர சிங் தோனி இனிமேல் ’மிஸ்டர் கூல்’ கிடையாது. அவர் யோகா செய்ய வேண்டியது அவசியம் என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி தெரிவித்துள்ளார். வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த 18ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்திலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை [21-06-15] நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வங்கதேசம் இந்திய அணியை வெற்றி கண்டது.

இதனால், தற்போது கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கேப்டன் பொறுப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், கேப்டன் பொறுப்பில் நான் விலகினால், இந்திய அணி நன்றாக விளையாடுமெனில் சந்தோஷமாக விலகத் தயாராக இருக்கிறேன் என்று மகேந்திர சிங் தோனி கூறியிருந்தார்.

தற்போது இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து பேசிய இந்திய அணி முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி, “முதன் முறையாக அவர் அர்த்தமற்று பேசியுள்ளார். இதன் மூலம், அவர் இனிமேல் ’மிஸ்டர் கூல்’ இல்லை எனபதன் அறிகுறி தெளிவாக தெரிகிறது. அவர் இறுக்கமாக உள்ளார்.

நான் அணியில் உள்ள எந்த ஒரு தனிப்பட்ட வீரர் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. பந்து வீச்சாளர் முஸ்தபிஹுர் ரஹ்மான் குறுக்கிட்டிருந்தாலும் கூட, இது தோனியின் தகுதிக்கேற்ற காரியமாக இல்லை. தோனி உடலளவிலும், மனதளவிலும் அமைதியற்றிருப்பது வெளிப்படையாக தெரிகிறது. அவர் யோகா பயிற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியமாகும்” என்று தெரிவித்துள்ளார்.