Breaking News

ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் ஏமி ஜாக்சன்

ஐ படத்துக்குப் பிறகு உதயநிதியுடன் கெத்து, தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி டீமின் இரண்டாவது படம் என இரு படங்களில் நடித்து வருகிறார் ஏமி ஜாக்சன். அடுத்து அவர் ஜீ.வி.பிரகாஷுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்
ஏ.எல்.விஜய்யின் உதவி இயக்குனர்கள் ஷங்கர், குணா இணைந்து இயக்கும் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கிறார். இந்தப் படத்தின் கதையை வெற்றிமாறன் எழுத, அட்லி வசனம் எழுதுகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக ஏமி ஜாக்சன் ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிப்பதுடன் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷே இசையமைக்கிறார்.