காரமான மிளகாய் உண்ணும் போட்டியில் உலக சாதனை!
காரமான மிளகாய் உட்கொள்ளும் போட்டி அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள சிச்சென் இட்சா சிற்றுண்டிச்சாலையில் இப் போட்டி நடைபெற்றது. ஓரு பாத்திரம் முழுக்க ஹபனெரோ எனும் காரமான மிளகாயை நிறைத்து வைத்து, பார்வையாளர்கள் முன்னிலையில் அந்த காரமான மிளகாய்களை கண்களில் நீர்வடியவடிய போட்டியாளர்கள் உட்கொண்டனர். ஹபனெரோ வகை மிளகாய் உலகின் மிகக் காரணமான மிளகாயாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இம்மிளகாயை உட்கொள்ளும் போட்டி வருடாந்தம் கலிபோர்னியாவில் நடைபெறுகிறது.



