ஒரே நாளில் இரு தடவை லொத்தர் பரிசு வென்ற நபர்
லொத்தர் சீட்டிழுப்பில் பெருந்தொகை பரிசு கிடைப்பதற்கு அதிஷ்டம் வேண்டும். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், ஒரே நாளில் இரு தடவை லொத்தர் டிக்கெட் மூலம் பெருந்தொகை பரிசை வென்றுள்ளார். அயோவா மாநிலத்தைச் சேர்ந்த 75 வயதான கென் புரோட்வெல் எனும் இந்நபர் கடந்த செவ்வாய்க்கிழமை சுரண்டல் லொத்தர் சீட்டு மூலம் 930 டொலர்களை (சுமார் 124,000 ரூபா) அதன்பின் அன்றைய தினமே மற்றொரு லொத்தர் சீட்டின் மூலம் ஒரு இலட்சம் டொலர்களை (சுமார் ஒரு கோடியே 33 இலட்சம் ரூபா) அவர் வென்றார். இவ்விரு லொத்தர் சீட்டுகளையும் அவர் ஒரே இடத்தில் வாங்கியமை குறிப்பிடத்தக்கது. தினமும் தான் லொத்தர் சீட்டுகளை வாங்குவதாக கென் புரோடவெல் கூறுகிறார். இரண்டாவது சீட்டை சுரண்டிக்கொண்டிருந்தபோது, பரிசுத்தொகையாக ஒரு இலட்சம் டொலர்கள் குறிப்பிடப்பட்டிருந்தமை தன்னால் நம்ப முடியா திருந்ததாக அவர் கூறினார். தனக்கு கிடைத்த பரிசு மூலம் வீடொன்றையும் புதிய வாகனமொன்றையும் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்



