சீரான தூக்கம் வேண்டுமா? உடற்பயிற்சி அவசியம்!
தூக்கம் உயிர்களின் புத்துணர்ச்சியாகும். அளவான தூக்கம் உற்சாகத்தை தரும். அதிக தூக்கம் சோம்பேறித்தனமாகும். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்கலாம். அதிக தூக்கம், குறைவான தூக்கம் பல்வேறு நோய்களை உருவாக்கலாம். தூக்கமின்மை என்பது இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கம் வராமல் விழித்திருப்பது, அல்லது தேவையான அளவு தூக்கம் இல்லாமல் இருப்பது ஆகும். இது ஒரு மருத்துவ அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. தூக்கமின்மைக்கு பின்னால் மருத்துவ காரணங்களும், மனநல காரணங்களும் இருக்கலாம். தூக்கமின்மை, ஆண்களைவிட பெண்களிடத்தில் அதிகம் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
தூக்கமின்மை (Insomnia, இன்சோம்னியா) என்பது ஒரு நோயின் அறிகுறி. தூங்குவதில் சங்கடங்கள் ஏற்படுதல் போன்று குறைவான தூக்கத்தினால் ஏற்படுகிற கோளாறுகளினால் ஏற்படும் நோயாகும். தூக்கமின்மையால் மறதி, மனச்சோர்வு, பேச்சு, செயல்பாடுகளில் எரிச்சல், இருதய நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம். தூக்கமில்லாதவர்களில் பலர் மாத்திரை எடுத்துக் கொள்ளும் பழக்கத்திற்கும் ஆளாகின்றனர்.



