லியாண்டர் பெயசுக்கு பிறந்த நாள் பரிசு
விம்பிள்டனுக்கு முன்னோட்டமாக லண்டன் குயின்ஸ் கிளப்பில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றுப்போனார். அவரை 79–ம் நிலை வீரர் அலெக்சாண்டர் டோல்கோபோலவ் (உக்ரைன்) 6–3, 6–7 (6–8), 6–4 என்ற செட் கணக்கில் சாய்த்தார். இதன் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்–கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடி 7–6 (3), 3–6, 10–7 என்ற செட் கணக்கில் விக்டர் டிரோக்கி (செர்பியா)– ராபர்டா பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்) இணையை வீழ்த்தியது. லியாண்டர் பெயசுக்கு நேற்று 42–வது பிறந்த நாளாகும். பிறந்த நாள் பரிசாக இந்த வெற்றி கிடைத்தது.



