நாம் அடைந்திருக்கின்ற கல்வி மட்டங்களும் சமூக வளங்களும் போதுமானதல்ல...!
நாம் அடைந்திருக்கின்ற கல்வி மட்டங்களும் பொருளாதார வளங்களும் நிச்சயமாகப் போதுமானதல்ல.ஆயிரக் கணக்கான இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றபோது ஒரு சிலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை விடுத்து அவர்களுள் ஐம்பது வீதத்தினரையாவது பல அரசாங்க மற்றும் தனியார் திட்டங்களினூடாக தலைசிறந்த வைத்தியர்களாக அல்லது பொறியியலாளர்களாக அல்லது உயாந்த அந்தஸ்துள்ளவர்காளாக உருவாக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
இளம் விதவைகள் மற்றும் விN|ட தேவையுடையோருக்கான புனித ரமழான் மாத உலருணவுப் பொருள் விநியோகம் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் அதன் தலைவர் இல்மி அஹமட் லெப்பையின் தலைமையில் காத்தன்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை (28) நடைபெற்றது. அந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வரையாற்றுiயிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஆயிரம் ரூபா பெறுமதியான பொதிகள் 600 பேருக்கு வழங்கப்படும் நிலையல் அவர்களுக்கு மேலதிகமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோ' வெளியே காத்துக்கொண்டிருக்கிறார்கள அறிகின்Nhம். அறுநூறு பேர் என்பது அறுநூறு குடும்பமாகும். காத்தான்குடியில் வாழ்கின்ற 13, 800 குடும்பங்களில் 600 குடும்பங்கன் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றதென்றால் எமது சமூகம் வறுமையினால் எவ்வளவு தூரம் பீடிக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்ற இவ்வாறான நிகழ்வுகளில் நாம் கலந்து கொள்ளும்போது அதனை எம்தால் உணர முடியும். தொடர்ச்சியாக இவ்வாறான உதவிகளைப் பெறுகின்ற சமூகமாக நாம் இருக்கக் கூடாது. ஒரு சமூகம் வழிப்படைய வேண்டுமானால் அந்த சமூகம் ஒரு உதவியைப் பெற்று இன்னுமொருவருக்கு உதவுகின்ற கமூகமாக மாறுகின்ற போதுதான் எமது சமூகம் தலை நிமிர்ந்து வாழக் கூடியதொரு சமூகமாக மாறும்.
ஆந்த வகையில் எதிர்வரும் காலங்களில் இவாவாறான செயற் திட்டங்களுக்கு அறுநூறு என்பது முன்னூறாக மாற வேண்டும். இவாவாறான உதவிகளுக்கு தகுதியானவர்கள் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். நபி (ஸல்) அவர்கள் வறுமையை பயந்திருக்கிறர்கள் வறுமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். ஆனால் ஏழ்மையாக வாழ்வதற்கு ஆசைப்பட்டிருக்கின்றார்கள். வறுமை என்பதும் ஏழ்மை என்பதும் இரண்டும் வித்தியாசமானவை வறுமை இறை நிராகரிப்பை ஏற்படுத்திவிடும் எனக் கூறப்படுகின்றது.. ஏழ்மை என்பது கிடைப்பதைப் போதுமென்ற மனப்பாங்குடன் வாழும் நிலையாகும்.
தமது வறுமையினை வெளிப்படுத்துவதற்கு விரும்பாத இவ்வாறானவர்ளை தெரிவு செய்து உதவிகளை வழங்குவது யாசகம் கேட்போருக்கு உதவுவதை விட மேலானதாகும். ஏனெனில் யாசகம் கேட்Nhர் தமது வறுமை நிiயினை பலரிடமும் கூறி தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வார்கள். ஆனால் தமது வறுமை நிலையின எவரிடமும் வெளிப்படுத்தாத இவர்களைப் போன்றவர்களை நாம் இரண்டு கண்களினாலும் பார்க்க வேண்டும்.
எமது எதிர்காலத் திட்டங்கள் வறிய குடும்பங்ளை மேம்படுத்துகின்ற திட்டங்களாக இருக்கும். மாறாக அபிவிருத்தி என்கின்ற போர்;வையில் நாங்கள் குடும்பங்களை அபிவிருத்தி செய்யாத திட்டங்களாக அவை இருக்கும்.. அவ்வாறான தொடர்புககளுக்கும் முன்னெடுப்புகளுக்கும் இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுப்பவர்கள் உதவி செய்வார்கள் என நம்புகின்றேன். சுமூகததின் அடிமட்டத்திற்கு இறங்கி மக்களின் நிலைமைகளை தெளிவான அறிந்து சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்கு உணர்ந்து செயற்படுகின்ற இவ்வாறான அமைப்பின் உதவியுடன் நிச்சயமக இவ்வாறான குடும்பங்களினது வாழ்வாதாரங்களை உயர்த்துகின்ற பணியினைச் செய்வதற்குக் காத்திருக்கின்றோம்.
எனது அலுவலகத்திற்கு வருகின்ற கோரிக்ககைகளில் நாளொன்றிற்கு 50 கோரிக்கைகள் வேலைவாய்ப்புப் பெற்றுத்தருமாறு கோருவதாகவே காணப்படுகின்றன. அவர்களுடைய குடும்பப் பின்னணிகளை ஆராயும் போது அவ்வாறானதொரு வேலைவாய்;புக் கிடைக்கும்போது அந்தக் குடும்பத்திலுள்ள ஐந்து அல்லது ஆறு பேர் மூன்று வேளை சாப்பி;டக் கூடிய அளவிற்கு அவர்களது நிலைமை இருக்கிறது என்பதை உணர முடிகின்றது.
ஆகவே இவ்வாறான செயற்றிட்டங்களை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்தால் 100 வீதம் அனைவருக்கும் வேலைவாய்ப்பபை வழங்க முடியாவிட்டாலும் கூட தனியார் துறையுpனுஸடகப் பெற்றுக் கொடுப்பதற்கு மிகவும் ஆவலாகவும் ஆர்வத்தோடும் செயற்பட்டு வருகின்றோம். ஏதிர்காலத்தில் இவ்வாறான குடும்பங்களில் இருந்தும் ஒரு பிள்ளைக்கு அரசதுறை அல்லது தனியார் துறை மூலமாக வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுதது தனது குடும்பத்தைக் கவனிக்கக் கூடிய பிள்ளையாக அந்தப் பிள்ளையை மாற்றுவதே எமது இலட்சியமாகும்.
அந்த வகையில் கடந்த மாகாணசபைக் காலப்பகுதிக்குள் 25 பேருக்கு அரச துறையில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்திருப்பதோடு தனியார் துறையில் சுமார் 48 வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்
தனது பிள்ளையின் கல்விக்காக இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்ய முடியாத நிலையில் அந்தப் பிள்ளையின் கல்விய நிறுத்துகின்ற அளவிற்கு எமது சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கின்றது. வெறுமனே இரண்டாயிரம் ரூபாய் எமதுசமூகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் நிலை காணப்படுகின்றது.
நாம் அடைந்திருக்கின்ற கல்வி மட்டங்களும் பொருளாதார வளங்களும் நிச்சயமாகப் போதுமானதல்ல.ஆயிரக் கணக்கான இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றபோது ஒரு சிலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை விடுத்து அவர்களுள் ஐம்பது வீதத்தினரையாவது பல அரசாங்க மற்றும் தனியார் திட்டங்களினூடாக தலைசிறந்த வைத்தியர்களாக அல்லது பொறியியலாளர்களாக அல்லது உயாந்த அந்தஸ்துள்ளவர்காளாக உருவாக்க வேண்டும்
இந்த அமைப்பு ஆரமபிக்கப்பட்டு வெறுமனே ஐந்து ஆண்டுகளில் இந்த நிகழ்வு அவர்களால் மேற்கொள்ளப்படும் 34ஆவது திட்டம் என்பது மிகவும் பெருமைக்குரிய விடயமாகும் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் அப்துல் காதர் (பலாஹி), காத்தான்குடி பெரிய மெத்தை ஜும்ஆப் பள்ளிவாயலின் பிரதம இமாம் அமீன் (பலாஹி), மட்டக்களப்பு மத்தி கல்வி வலய சேவைக் கால ஆலோசகர் அப்துல் கபூர் மதனி, கிழக்கு மாகாண முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிராந்திய பணிப்பளர் ஜீனைட் நளீமி, சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள், பயனாளிகள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நமது நிருபர்



