மஹிந்த எங்கேயோ நாங்களும் அங்கே - கூறுகிறார் விமல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவார் எனவும் அவர் போட்டியிடும் அணியிலேயே தேசிய சுதந்திர முன்னணி போட்டியிடும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பில் அதன் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்மானமொன்றிற்கு வந்துள்ளதாகவும் வீரவன்ச தெரிவித்தார்.
நேற்றைய தினம் (25) பத்தரமுல்ல ஜயந்திபுரவில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே இக்கருத்து வெளியிடப்பட்டது.
நமது நிருபர்



