வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை !
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, வியட்நாமிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ தான் முதலீடுகளை செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். வியட்நாமுக்கு பணத்தை அனுப்பும் அளவுக்கு தம்மிடம் பணம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். டுபாய்க்கு பணத்தை எடுத்துச் செல்லவில்லை என்றும் அவர் கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மாத்திரம் தமக்கு வங்கிக்கணக்கு இருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், அதனை தாம் வருடந்தோறும் வெளிப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தாம் பொருளாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது பொருளாதாரம் நாட்டின் சிறப்பானதாகவே அமைந்திருந்ததாக பசில் தெரிவித்துள்ளார்.



