மகிந்த வர்ணித்த அழகிய பெண் அமைச்சர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமைச்சர் தலதா அத்துகோரளவின் அழகை வர்ணித்துள்ளார். ஆளும் கட்சியில் இருப்பதால், நீங்கள் மிகவும் அழகாக மாறிவிட்டீர்கள் என முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர் தலதா அத்துகோரளவை பார்த்து கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர், அதிகமாக ஓய்வெடுப்பதால், முன்னாள் ஜனாதிபதியே அதிகமாக அழகானவராக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இரத்தினபுரி சிறிய தம்பதிவ விகாரையில் நடந்த வைபவம் ஒன்றில் இந்த சம்பாஷணை நடந்துள்ளது.



