Breaking News

நேர்மையாக சேவையாற்றியிருந்தால் அஞ்ச வேண்டிய அவசியமில்லை!

மக்கள் பல்வேறு கொலை மிரட்டல்களுக்கும் அழுத்தங்கள்களுக்கும், மத்தியிலும் தைரியமாக தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர். நேர்மையாக சேவையாற்றியிருந்தால் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மக்கள் புதிய அரசியல் கலாச்சாரமொன்றை உருவாக்கியுள்ளனர். மிகவும் சொற்ப அளவிலானவர்கள் நல்லாட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நல்லாட்சியைக் கண்டு அஞ்சுகின்றனர். எனினும், நாம் ஒரு போதும் குரோத அரசியலில் ஈடுபடப் போவதில்லை, குற்றவாளிகளை பாதுகாக்கப் போவதுமில்லை. மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் உண்மையாக சேவையாற்றியிருந்தால் எந்தவொருவரும் உண்மையைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டியதில்லை என அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.