Breaking News

தினமும் 100 கிராம் சாக்லெட் சாப்பிட்டால் இதய நோய்கள் வராதாம் !




இங்கிலாந்தின் நார்த் போல்க் நகரில் உணவு முறை குறித்தும் அதனால் ஏர்படும் உடல் நலம் பற்றியும் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 25 ஆயிரம் ஆண் மற்றும் பெண்களஇடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சாக்லெட் அதிகம் சாப்பிடும் இளைஞர்கள் உடல் எடை குறைவாகவும், ரத்தம் அழுத்தம் மற்றும் புரோட்டீன், சர்க்கரை அளவு சீராக இருப்பது கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் உடலின் செயல்பாடுகள் சீரான அளவில் நடப்பதால் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிக அளவில் வர வாய்ப்பு இல்லை.

அப்படி ஏற்பட்டாலும் 9 சதவீதம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளனர். மரண விகிதமும் மிகவும் குறைவாகவே இருந்தது. இவர்கள் தினமும் 100 கிராம் அளவில் சாக்லேட் சாப்பிட்டு வந்தவர்கள். அதனால் உடலுக்கு கூடுதல் சக்தி கிடைத்ததால் ரத்த ஓட்டம் சீராகியதால் இருதய நோய்கள் தாக்கவில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சாக்லேட் குறைவாக சாப்பிட்ட 25 சதவீதம் பேர் இருதய நோய்களினால் அவதிப் படுவதும் தெரியவந்தது. இறப்பு விகிதமும் அதிகமாக இருந்தது. எனவே தினமும் 100 கிராம் அளவு பாலினால் தயாரிக்கப்ப்டட சாக்லேட்டுகள் மற்றும் கருப்பு சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு அதிக அளவில் இருதய நோய்கள் ஏற்படாது என கண்டறியப்பட்டுள்ளது.