Breaking News

மதுபோதையில் சிமென்ட் கான்கிரீட்டை சாப்பிட்டு மட்டையான சீனர்

சீனாவில் ஓவராகக் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த நபர் ஒருவர், வரும் வழியில் பக்கெட்டில் எடுத்து வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் கலவையை ஏதோ சிக்கன் பிரியாணி போல எடுத்துச் சாப்பிட்டு வயிறை மட்டையாக்கிவிட்டார்.

ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த நபர், இரவில் கான்கிரீட்டுக்கும், உணவுக்கும் வித்தியாசம் தெரியாமல் சுமார் 250 கிராம் கான்கிரீட்டை சாப்பிட, வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர், மருத்துவமனையில் அனுமதித்தனர். உடனடியாக அவரது வயிற்றில் இருந்து கான்கிரீட் கலவையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.