Breaking News

NDB வங்கி அனுசரனையில் மோத தயாராகும் புனித மிக்கேல் கல்லூரி மற்றும் மெதடிஸ்த மத்திய கல்லூரி.

கடந்த சில வருடங்களாக அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய மட்டக்களப்பின் மாபெரும் கிறிக்கட் சமர் என வர்ணிக்கப்படும் மட்டு நகரின் பிரபல ஆண்கள் பாடசாலைகளான புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலைக்கும் மெதடிஸ்த மத்திய கல்லூரிக்குமான கடின பந்து கிறிக்கெட் சமர் எதிர்வரும் 27.06.2015 சனிக்கிழமை  காலை 8.00 மணிக்கு மட்/சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

6 வது தடவையாக நடைபெறவுள்ள இம்மாபெரும் போட்டியில் இரு பாடசாலைகளும் தங்களை தயார்படுத்துவதில் மும்முரமாக ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.

இப்போட்டிக்கான அனுசரனையை இம்முறை NDB வங்கி வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை NDB வங்கியின் முகாமையாளர் திரு.K.இராஜேந்திரா அவர்களினால் உத்தியோக பூர்வமான வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வுக்காக பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகள் அதீத எதிர்பார்ப்புக்களுடன் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. கடந்த 5 வருடங்களில் புனித மிக்கேல் கல்லூரி 2 தடவையும் மெதடிஸ்த மத்திய கல்லூரி 3 தடவையும் வெற்றி பெற்றதுடன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.