Breaking News

ஜப்பானிய பெண்களை கவர்ந்திழுக்கும் ஆண் கொரில்லா

திரண்ட தசைகளுடன் நல்ல தோற்றம் கொண்ட பெரிய கொரில்லா, ஒன்று  ஜப்பான் மிருகக்காட்சிசாலையில் பெரும் புகழ் அடைந்து உள்ளது

ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் உள்ளது  ஹிகாசியாமா உயிரியல் மற்றும் தாவரவியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சபானி என்ற 18 வயதுள்ள பெரிய கொரில்லா  ஒன்று உள்ளது. இதன் எடை 180 கிலோ. இந்த சில்வர்பேக்  கொரில்லாதான் இந்த மிருகாட்சி சாலையின் ஹீரோ இந்த கொரில்லாவை பார்ப்பதற்கு என்றே இங்கு ஆயிரகணக்கான பொது மக்கள் குறிப்பாக பெண்கள்  வருகிறார்கள்.  

அந்த ஆண் குரங்கு அடிக்கடி தனது கைகளை கன்னத்தில் வைத்து கொள்ளும் பின்னர் அது தீவிரமாக உங்களை உற்று நோக்கும்.மற்ற கொரில்லாக்களை விட இது மிக பொலிவான நிறத்தில் இருக்கும். இந்த ஆண் கொரில்லாவை பார்ப்பதற்கு என்றே அதிகப்படியான பெண் வாடிக்கையாளர்கள் வருவது உண்டு . பல பெண்கள் கொரில்லா மிக அழகாக உள்ளது என எங்களிடமே  தெரிவித்து உள்ளனர்.என உயிரியல் பூங்காவின் செய்தி தொடர்பாளர் தகயுகி இசிக்கவா கூறினார்

தகயுகி இசிக்கவா  கூறியதாவது:-

சிபானி கடநத் 2007 ஆம் ஆண்டு இந்த மிருககாட்சி சாலைக்கு வந்தது.உயிரியல் பூங்காவின் இந்த ஆண்டு  வசந்த கால திருவிழாவுக்கான விளம்பரத்தில் நாங்கள்  சபானியைதான்  பயன்படுத்தினோம் அது முதல் அது மிக பிரபலமானது. பெண்கள் மத்தியில் அந்த கொரில்லாவுக்கு அதிக செல்வாக்கு.அது பல குழந்தைகளின் தந்தை  அதன் குழந்தைகளை பாதுகாத்து கவனித்து கொள்கிறது.சபானி கொரில்லாவின் பெருமை சமூக  இணையதளங்களிலும் பரவி உள்ளது.  ஒரு பெண்  சபானியின் கரடு முரடான தோற்றம் நம்மை மூர்ச்சை அடைய செய்யும். அதனை அழகான மனிதன் அல்லது ஹங்  என விவரித்து ஆண்  மாடல்களுடன் ஒப்பீட்டு உள்ளனர் . என உயிரியல் பூங்காவின் செய்தி தொடர்பாளர் தகயுகி இசிக்கவா கூறி உள்ளார்.