Breaking News

கிம் கர்தர்ஷியான் ஜோடியாகும் தனுஷ் - புரளியை கிளப்பும் மனநோய் இயக்குனர்

கிம் கர்தர்ஷியான் ஜோடியாகும் தனுஷ் - புரளியை கிளப்பும் மனநோய் இயக்குனர்

ஃபைசல் சைஃப். இந்தப் பெயரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். என் பெயர் ரஜினிகாந்த் என்ற பெயரில் இந்தியில் படம் எடுத்து, ரஜினியால் வழக்கு தொடரப்பட்டு பெயரை மாற்றியவர்.

பரபரப்பான எந்த விஷயம் கிடைத்தாலும் உடனே அதனை படமாக்கி காசு பார்க்க நினைக்கும் குறுக்குப் புத்திக்காரர் இந்த ஃபைசல். பரபரப்பு இவரது ஒரு முகம் என்றால், ஆபாசம் இன்னொரு முகம்.

பிரபலமாக இருப்பவர்களின் பெயரை தனது படத்துக்கு எந்த வகையிலாவது பயன்படுத்திக் கொண்டு, படத்தை பிரபலப்படுத்துவது. பிரச்சனை வந்ததும் ஜகா வாங்குவது. இதுதான் இவரது வியாபார தந்திரம்.

செக்ஸியாக ஒரு கதையை எழுதி, இது மல்லிகா ஷெராவத்தின் கதை, அவர் நடிக்கிறார் என்று  அறிவித்தார். மல்லிகா அந்த கதையில் நடிக்க மறுக்க, பாகிஸ்தான் நடிகை ஒருவரை வைத்து படத்தை எடுத்தார். அதேபோல் ரஜினிகாந்தின் பெயரை வைத்து ஒரு ஆபாசப்படம். அது பிரச்சனையாகி படம் பிரபலமானதும் பெயரை மாற்றினார்.

இப்போது ஃபைசல் உலக அளவில் கவர்ச்சிக்காக பேசப்படும் கிம் கர்தர்ஷியானின் பெயரை பயன்படுத்துகிறார். அவர் எடுக்கப் போகும், ஃபார் அடல்ஸ் ஒன்லி படத்தில் கிம் கர்தர்ஷியான் நாயகியாம். நாயகனாக நடிப்பது தனுஷாம். 

ஃபைசல் இப்படியொரு படம் எடுப்பது கிம்முக்கோ, தனுஷுக்கே 100 சதவீதம் தெரியாது. அவர்களுக்கு தெரியாமலே அவர்களின் பெயர்களை பயன்படுத்தி படத்தை பரபரப்பாக பேச வைப்பதுதான் இந்த விளம்பர மோகியின் நோய். 

ஆசிட்டில் ஊறவிட்டாலும் இந்த நபரின் மனநோய் அழுக்கு மாயாது மறையாது.