Breaking News

எவரெஸ்ட் சிகரம் இந்த நூற்றாண்டிற்குள் உருகிவிடும் !!!

உலகின் மிகப்பெரிய சிகரமாக எவரெஸ்ட் சிகரம் விளங்குகிறது. இந்தியா, நேபாளம், சீனா ஆகியவற்றின் எல்லையாக விளங்கும் இயற்கை பனிமழையான எவரெஸ்ட் சிகரம் 29,029 அடி உயரமானது. பூமியின் மிகச்சிறந்த இயற்கை அடையாளங்களில் ஒன்றான எவரெஸ்ட் சிகரம் விளங்கி வருகிறது.

இந்நிலையில், தற்போதைக்குள் உள்ள நிலைமையில், எவரெஸ்ட் பனி மலை இந்த நூற்றாண்டுக்குள் மறைந்துவிடும் என்ற விஞ்ஞானிகளின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவித்துள்ளன. பருவநிலை மாற்றத்தால் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை உருக வாய்ப்பிருபதாக கூறியுள்ளனர்.

பருவநிலை மாற்றம், உயரும் வெப்ப நிலை குறித்த தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நேபாளம், பிரான்ஸ், நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் செயற்கைக்கோள் படங்களை கொண்டு ஆய்வு நடத்தினர். இவர்கள் ஆய்வின் படி எதிர்காலத்தில் உயரும் வெப்பநிலையால் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள் மறைந்து விடும் என எச்சரித்துள்ளனர்.