Breaking News

போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பொலீஸ் நிலையத்தினால் விசேட ஏற்பாடுகள் - காத்தான்குடி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி

போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பொலீஸ் நிலையத்தினால் விசேட ஏற்பாடுகள் - காத்தான்குடி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி தகவல்

எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆந் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பொலீஸ் நிலையத்தினால் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தெரிவித்தார்.

நாடு தழுவிய ரீதியில் பொலீஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் அனுஷ்டிக்கப்படவுள்ள உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் தொடர்பில் தெளிவுபடுத்தும்போதே இத் தகவல்களை வெளியிட்டார். 

2015.06.26ஆந் திகதி உலக போதைப்பொருள் ஒழிப்பு தினமாகும். இந்தத் தினத்தினையிட்டு போதைப் பொருளிலிருந்து தமது பிள்ளைகளையும்இ ஏனைய சிறுவர்களையும் பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் விழிப்புணர்வை எற்படுத்தும் வகையில் சகல இடங்களிலும் சுவரொட்டிகளைக் காட்சிப்படுதத்pயுள்ளோம். 26ஆந் திகதி விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை பாடசாலைமட்டத்திலும் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் மூலமாகவும் தெளிவூட்டும் அதேவேளையில் சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். 

பொலீஸ் அத்தியட்சகர் பிரிவுகளில் பிரதிப் பொலீஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலீஸ்மா அதிபர் ஊடாக இந்த நடவடிக்கைகள் மேற்கொளளப்படவுள்ளன. 

குறிப்பாக சுற்றிவளைப்புகள் தொடர்பான செயற்பாடுகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டு தற்போது அவை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் காத்தான்குடி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தெரிவித்தார்.
நமது நிருபர்