Breaking News

ஜப்பானில் முதல் முறையாக ரோபோக்கள் பணி செய்யும் ஓட்டல் ஜுலைமாதம் திறக்கப்படுகிறது

ஜப்பான் நாட்டில் பல்வேறு அதி நவீன பொருட்கள் தயாரிக்கபட்டு வருகின்றன.அதில் பல வினோதமான பொருட்களும் அடங்கும். உதாரணமாக நாகசாகி நகரில் உள்ள வருகிற ஜூலைமாதம் முதல்  திறக்கப்படும் ஓட்டல் ஒன்றில் பணிகள் அனைத்திற்கும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இரண்டு மாடி உள்ள இந்த ஓட்டல் கியூஷ் டென் போச் என்ற தீம் பார்க்கில் தொடங்கப்படுகிறது.  வரவேற்பு மற்றும் ரூம் சர்வீஸ் போன்ற பணிகளுக்கு ரோபோ பயன்படுத்தப்படும். 

இது குறித்து நிறுவனத்தின் தலைவர் ஹிடியோ சவாடா  கூறும் போது இது உலகிலேயே செயல்திறன் மிக்க ஓட்டலாக விளங்கும்.அறைகளை சுத்தம் செய்வது,போர்ட்டர் சர்வீஸ், வரவேற்பு அறை கவனிப்புகள்,  மற்றும் பல்வேறு பணிகளுக்கு ரோபோ பயன்படுத்தப்படும். இந்த வளாகத்தில் மொத்தம் 72 அறைகள் இருக்கும். ஒரு அறையின் வாடகை நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் யுவான் ஆகும்.இந்த ஓட்டலில் 90 சதவீத பணிகள் ரோபோவால் இயங்கும் இவ்வாறு அவர் கூறினார்.