Breaking News

வேகமாக அழிகிறது மனிதஇனம் ஆய்வில் தகவல்

உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது என அனைவரும் சொல்வது தான். ஆனால் பூமியில் 100 மடங்கு வேகமாக அழிந்து வரும் உயிரினம் மனிதர்கள் என அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த திடுக் தகவல் வெளிவந்துள்ளது. 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வேகமாக அழிந்த உயிரினம் டைனோசர். அதற்கு பிறகு வேறு எந்த உயிரினமும் அதிவேகமாக அழியவில்லை. ஆனால் தற்போது வேகமாக அழிந்து வரும் உயிரினங்களில் 6வது இடத்தில் மனித இpம் உள்ளது என ஸ்டான்போர்ட், பிரின்ஸ்டன், கலிபோர்னியா ஆகிய பல்கலை.,கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

இதே நிலை தொடர்ந்தால், மனிதஇனம் அழிந்து விடுவதுடன், பூமியில் மீண்டும் மனித இனம் தோன்ற பல மில்லியன் ஆண்டுகள் ஆகும் என இந்த ஆய்வு தொடர்பாக புத்தகம் எழுதி உள்ள மெக்சிகோ எழுத்தாளர் ஜிரார்டோ செபாலஸ் எச்சரித்துள்ளார். தவளைகள், ஊர்வன, புலிகள் போன்றவைகளின் எலும்பு படிவங்களைக் கொண்டு, வேகமாக அழிந்து வரும் உயிரினங்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.

மனித இனம் வேகமாக அழிந்து வந்தாலும், அதற்கு முன் இயற்கை மாறுபாடுகளில் பல இனங்கள் பூமியில் இருந்து முற்றிலும் அழிந்து விடும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது இருவாழ்விகள் 41 சதவீதமும், பாலூட்டி உயிரினங்கள் 26 சதவீதமும் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.

வேகமாக பெருகி வரும் மக்கள் தொகை, பழக்க வழக்க மாறுபாடுகள், தட்பவெப்ப நிலை மாறுபாடு, பொருளாதாரத்தை பெருக்க வேண்டும் என்ற அதீத ஆசை ஆகியனவே மனித இனம் மிக வேகமாக அழிந்து வருவதற்கான முக்கிய காரணங்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.