Breaking News

அமெரிக்காவிடம் ஒசாமாவின் இறப்பு சான்றிதழை கேட்ட மகன்: அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்

அவ்வப்போது முக்கியமான, ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் விக்கிலீக்ஸ் நிறுவனம், தற்போது சவுதி அரேபிய தூதரக ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில் ஒசாமா பின்லேடனின் மகன், தனது தந்தை இறந்து விட்டதற்கான சான்றிதழ் தர வேண்டும் என அமெரிக்க நிர்வாகத்திற்கு எழுதி உள்ள கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது. சவுதி அரேபிய தூதரகத்திற்கு வந்துள்ள ஏறக்குறைய 5 லட்சத்திற்கும் அதிகமான ஆவணங்களை விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 60,000 ஆவணங்களை வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ், ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் எழுதி கடிதத்தையும் வெளியிட்டுள்ளது. அப்துல்லா பின் லேடன், ரியாத்திற்கான அமெரிக்க தூதர் கிலின் கெய்சருக்கு இந்த கடிதத்தை எழுதி உள்ளார். அப்துல்லாவின் கடிதத்திற்கு பதில் அனுப்பி உள்ள கெய்சர், பயங்கரவாத அழிப்பு நடவடிக்கையில் இத்தகைய கொலைகள் சகஜமானவை என குறிப்பிட்டதுடன், ஒசாமா இறந்து விட்டதற்கான சான்றிதழையும், அதற்கான அமெரிக்க கோர்ட்டின் ஆவணங்களையும் அனுப்பி உள்ளார். இவைகளை விக்லீக்ஸ் வெளியிட்டுள்ளது.