சஜின் வாசுவுக்கு விளக்க மறியல் நீடிப்பு
பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை தொடர்ந்தும் ஜூன் மாதம் 24 ஆந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே இன்று (17) உத்தரவிட்டார். அவர்சார்பாக முன்வைக்கப்பட்ட பிணைவும் மனு நிராகரிக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 22 வாகனங்கனை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் சஜின் வாசுவுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நமது நிருபர்



