Breaking News

இலங்கை - இந்தியாக்கு இடையில் பேரூந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவை

இலங்கை - இந்தியாக்கு இடையில் பேரூந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேரூந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அகர்தலாவில் இருந்து பங்களாதேஸின் டாக்கா, பூட்டான், இந்தியா-நேபாளம் ஆகிய இடங்களுக்கு இடையில் பேரூந்து சேவை உடன்பாடு செய்துக்கொள்ளப்பட்ட நிகழ்வில் இந்த தகவலை, இந்திய மத்திய வீதிப்போக்குவரத்துத்துறை அமைச்சர் நிட்டின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான வீதி அமைப்பை பாக்கு நீரிணையின் ஊடாக பாலம் அமைப்பதன் மூலம் மேற்கொள்ள முடியும். அத்துடன் கடலுக்கடி சுரங்கம் மூலம் மேற்கொள்ளமுடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.