அடுத்த சவாலுக்கு இந்தியா ‘ரெடி’ * நாளை ஒருநாள் தொடர் ஆரம்பம்

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாதிக்க, தோனி தலைமையிலான இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி விடைபெற்றதால், கோஹ்லி தலைமையில் வங்கதேசம் சென்றது இந்திய அணி. இரு அணிகள் மோதிய பதுல்லா டெஸ்ட் ‘டிரா’ ஆனது. அடுத்து இரு அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன.
முதல் போட்டி நாளை மிர்புரில் நடக்கிறது. தொடர்ந்து ஜூன் 21, 24 ல் அடுத்த இரு போட்டிகளும் மிர்புரில் நடக்கும். சமீபத்தில் சொந்தமண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் வங்கதேச அணி, பாகிஸ்தானை 3–0 என்ற கணக்கில் வீழ்த்தி முழுமையாக தொடரை வென்றது. இதையடுத்து இந்திய அணி முழு பலத்துடன் வங்கதேசத்தை எதிர் கொள்ள தயாராகி வருகிறது. இதற்காக கேப்டன் தோனி, ரெய்னா, ஸ்டூவர்ட் பின்னி, ரவிந்திர ஜடேஜா, குல்கர்னி, அக்சர் படேல், அம்பதி ராயுடு மற்றும் மோகித் சர்மா அடங்கிய இந்திய அணி நேற்று முன்தினம் வங்கதேசம் சென்றது.