எகிப்து முன்னாள் அதிபரின் மரணதண்டனையை உறுதி செய்தது கோர்ட்
எகிப்து முன்னாள் அதிபரின் மரணதண்டனையை உறுதி செய்தது கோர்ட்கெய்ரோ : ஜெயில் உடைப்பு வழக்கில் குற்றம் சாட்டுப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட எகிப்து முன்னாள் அதிபர் மோர்சியின் மரண தண்டனையை, அநநாட்டு கோர்ட் உறுதி செய்துள்ளது. எகிப்தில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் மோர்சி. இவரின் பிரிவனைவாத கொள்கைகள் பிடிக்காத மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் கடந்த 2013ல் அவர் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 2011ல் நடந்த கிளர்ச்சியில், ஜெயில் உடைப்பில் ஈடுபட்டதாக அவர்மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் தொடரப்பட்ட வழக்கில், கெய்ரோ நீதிமன்றம் மோர்சி உள்ளிட்ட 20 பேருக்கு மரண தண்டனை விதித்தது. அந்நாட்டு வழக்கப்படி, முஸ்லீம் மத தலைவர்களை கொண்ட கிராண்ட் முப்தி அமைப்பு சம்மதித்தால் மட்டுமே மரண தண்டனை அளிக்கமுடியும். இந்நிலையில் கிராண்ட் முப்தி அமைப்பு மோர்சியின் மரண தண்டனையை ஆதரித்ததால், அவர் உட்பட 20 பேரின் மரண தண்டனையை கெய்ரோ கோர்ட் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு மேல் முறையீட்டுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



