Breaking News

உலகின் வயதான புதுமணத்தம்பதியினர்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் வழக்கம் மேற்கத்திய நாடுகளில் சகஜம். இவ்வாறு சேர்ந்து வாழும் ஜோடிகள் சில நேரம் பாதியிலே பிரிந்து போவதும் உண்டு. ஆனால் 27 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த வயதான ஒரு தம்பதி சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம், இங்கிலாந்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு இங்கிலாந்தின் ஈஸ்ட் போர்ன் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் கிர்பி. முன்னாள் குத்துச் 
சண்டை வீரரான இவர், டொரீன் லக்கி என்ற பெண்ணுடன் 27 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தார். இவர்களுக்கு 7 பிள்ளைகளும், 15 பேரப்பிள்ளைகளும், 7 கொள்ளு பேரப்பிள்ளைகளும் உள்ளனர். தற்போது ஜார்ஜுக்கு 103 வயதும், லக்கிக்கு 91 வயதும் ஆகும் நிலையில், இந்த தம்பதி திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி கடந்த காதலர் தினத்தன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அதைத்தொடர்ந்து கடந்த வாரம் இவர்கள் இருவரும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.