காற்றில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த bouncy castle விளையடிக்கொண்டிருந்த 3 வயதான சிறுமி பலி !
காற்றில் தூக்கி வீசப்பட்ட விளையாட்டுக் கோட்டையில் (bouncy castle) விளையடிக்கொண்டிருந்த மூன்று வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம் தெற்கு சீனாவிலுள்ள குவாங்சி பிராந்தியத்ததில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி, நவீன அங்காடி ஒன்றுக்கு வெளியே இருந்த காற்றடைக்கப்பட்ட விளையாட்டுக் கோட்டையில் விளையாடிக்கொண்டிருந்த போது, அந்த கோட்டை சிறிய புயலால் தூக்கி வீசப்பட்டுள்ளது. இதன்போது படுகாயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்ற போது, குறித்த சிறுமியை காப்பாற்ற ஒரு பெண் முயன்றபோதும் அம்முயற்சி பலனளிக்கவில்லையென அந்நாட்டின் செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. நவீன அங்காடிக்கு வெளியே காணப்பட்ட காற்றடைக்கப்பட்ட விளையாட்டுக் கோட்டை சரியாக பராமரிக்கப்படுவதில்லையென தெரிவித்த அப்பிராந்தியத்தின் வேலை பாதுகாப்பு பணியகம், அந்த விளையாட்டுக் கோட்டைக்கான உரிமமும் பெறப்படவில்லையென தெரிவித்தது.



