மட்டக்களப்பு சீமா கற்கைநெறி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இம்முறை உயர்தர பரீட்ச்சையில் வணிகக்கல்வி பிரிவில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு.
மட்டக்களப்பு சீமா கற்கைநெறி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இம்முறை உயர் தர பரீட்ச்சையில் வணிகக்கல்வி பிரிவில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது .
இக்கருந்தரங்கு நிகழ்வின் போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முகாமைத்துவ வர்த்தக பீடத்திற்கு தெரிவான கலாநிதி செல்வரத்தினம் குணபாலானை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு உயர் தொழிநுட்பக் கல்லூரி விரிவுரையாளர் செல்வரெத்தினம் ஜெயபாலன் , தமிழ் ஆசிரியர் எஸ்.எஸ்.அமல் ,வணிகக்கல்வி ஆசிரியர் கே .கே .அரஸ்,தென்கிழக்கு பல்கலைகழக ஆசிரியர் எ அலீம் ,அம்பாறை உயர் தொழிநுட்ப விரிவுரையாளர் எஸ் .எ .தவ்பிக் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
( நியூ வற்றி அமிர்தகழி நிருபர் )


