Breaking News

காத்தான்குடி OSA அமைப்பின் தலைவர் இல்மி அஹமட்லெவ்வை அவர்களினது பெருநாள் வாழ்த்துச்செய்தி

இராமுழுவதும் இறைவனை தொழுது மாதம் முழுவதும் மாநபி  காட்டிய நோன்பிருந்து மறையினையும் ஓதி ஆத்மீக அமல்கள் அத்தனையும் செய்து உரிமையோடு புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற நம் ஈமானிய உம்மாக்களுக்கு விசேடமாக சமூகத்தில் நலிவுற்று வாழும் சகோதரர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

வலிந்து கேட்டுப் பெறாது வீடுகளுக்குள் வெந்து வாழுகின்ற கணவணை இழந்த இளம் விதவைகள் விசேடதேவையுடையோர் மற்றும் பெற்றோரை இழந்த அனாதைச்சிறார்கள் ஆகியோரது நலனுக்காக உழைத்துவருகின்ற வலிந்துதவும் இயக்கம் என்ற அடிப்படையிலும் இவர்களது வாழ்வில் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் மலர இந்நன்னாளில் எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதோடு அனைவருக்கும் நல்வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றோம்.

அத்தோடு, எமது அனைத்து நிகழ்வுகளிலும் சிரமம் பாராது கலந்துகொண்டு சிறப்பிகின்ற சங்கைக்குரிய உலமாக்கள் உற்சாகத்தோடு கலந்து கொள்கின்ற ஊர்பிரமுகர்கள்  குறிப்பாக எமக்கு பங்களிப்புகளை செய்து வருகின்ற தாராள மனம்கொண்ட தனவந்தர்கள் நலன்விரும்பிகள் கடல் கடந்து வாழும்  OSA வின்  அபிமானிகள் ஆலோசனைகளை வழங்குகின்ற கல்விமான்கள் மேலும் எமது செய்திகளை உடனுக்குடன் பதிவேற்றி உலகறியச்செய்கின்ற இணைய தளங்கள் செய்தித்தாள்கள் தொலைக்காட்சிகள் மற்றும் ஊடக உறவுகள் அனைவருக்கும் எமது புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை ஊடகங்களுக்கூடாக அனுப்பி வைப்பதில் மட்டில்லா மகிழ்சி அடைகின்றோம்.

என இல்மி அஹமட் லெவ்வை அவரின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்தார்.