Breaking News

மஹிபால மற்றும் அவரது புதல்வர் ஆகியோர் பங்குபற்றவிருந்த கூட்டத்திற்கு தடை

சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், அவரது புதல்வர் பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் ஆகியோரின் தலைமையில் அரநாயக்க ரிவிசந்த மெதி வித்தியாலயத்தின் அரங்க மண்டபத்தில் இன்று (11) நண்பகல் 12 மணிக்கு நடத்தப்படவிருந்த தேர்தல் தொடர்பான கூட்டம் கேகாலை உதவித் தேர்தல்கள் ஆணையாளரின் உத்தரவிற்கு அமைவாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலீஸார் தெரிவிக்கின்றனர். 


அரசாங்கத்திற்கு சொந்தமானதொரு இடத்தில் அரசியல் கூட்டமொன்றை நடாத்துதல் சட்டவிரோதமானதென கூட்டமைப்பின் பிறிதொரு வேட்பாளரால் கேகாலை உதவித் தேர்தல்கள் ஆணையாளரிம் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் குறித்த கூட்டத்தினை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டாமென பணிப்புரைவிடுத்ததாக தெரியவருகிறது.     
நமது நிருபர்