ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது - பிரதி சொலிசிட்டர் ஜெனரல்
இந்த நாட்டின் அரசியல் யாப்பின் 35ஆவது அத்தியாயத்திற்கு அமைவாக ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தசநாயக்க தெரிவித்தார்.
அதேபோன்று அவரது செயற்பாடுகள் அல்லது அவரது உத்தரவுகளுக்கு எதிராக ஆணை பிறப்பிக்கு அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தசநாயக்க நேற்றைய தினம் (10) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்றுள்ள இந்த அதிகாரத்திற்கு அமைவாக தற்போதைய ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை நீதிமன்றத்தினால் சவாலுக்குட்படுத்த முடியாது எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்
நமது நிருபர்



