Breaking News

ஆபாச வீடியோ சர்ச்சை: நியாயம் கிடைக்கும் வரை போராடுவோன் என்கிறார் ஆஷா சரத்

பெண்களை மதிக்க வேண்டும், இழிவுபடுத்தக் கூடாது என்பதை உறுதி செய்ய நாம் அனைவரும் கைகோக்க வேண்டும் என்று நடிகை ஆஷா சரத் தனது முகநூல் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார். ஆபாச வீடியோ பதிவு தொடர்பாக நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்திலும் அதே போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து தமிழிலும் பிரபலமாக இருக்கிறார்.‘ 'பாபநாசம்' படத்தில் ஆஷா சரத் நடிப்பைப் பார்த்து 'தூங்காவனம்' படத்திலும் வாய்ப்பளித்திருக்கிறார் கமல். சில நாட்களாக ஆஷா சரத்தின் ஆபாச வீடியோ என்ற வாசகங்களுடன் வாட்ஸ்-அப்பில் பகிரப்பட்டு வந்தது. இது குறித்து ஆஷா சரத் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.